சனி, 15 ஜனவரி, 2011

சொல் வளம் - 1 : உங்கள் தமிழ்த்திறனைத் தெரிந்து கொள்ளுங்கள்

பின் வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள்.  உங்களுக்குக் கொடுக்கப் பட்ட நேரம் ஐந்து நிமிடங்கள்.  அகராதிகளையோ, வேறு நூல்களையோ, கூகிள், யாகூ போன்ற வலைத்தேடு பொறிகளையோ பயன்படுத்தக் கூடாது.  ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்.  விடைகளை இன்னொரு பதிவில் காணலாம்.

========================================================

1. அழுக்காறு
  1. சென்னையில் ஓடும் ஒரு ஆறு
  2. தூய்மையற்றது
  3. பொறுமை
  4. பொறாமை

2. விசும்பு
  1. தேம்பி அழு
  2. விக்கி அழு
  3. மழை மேகம்
  4. குறும்பு செய்

3. பனுவல்
  1. பணிதல்
  2. நூல்
  3. கண்டு
  4. தக்கிளி
4. சிவிகை
  1. ஒட்டகம்
  2. திமில்
  3. பல்லக்கு
  4. சிதைந்த கை
5. வையம்
  1. திட்டு
  2. பூமி
  3. வயல்
  4. நாற்று.
6. மாண்பு
  1. வீரம்
  2. பெருமை
  3. துணிவு
  4. அறிவு.
7. செறிவு
  1. செருப்பு
  2. கூட்டம்
  3. தோல்
  4. சிரங்கு.
8. ஊருணி
  1. புழு
  2. குளம்
  3. பெண்
  4. பறவை
9. ஒப்புரவு
  1. நெருங்கிய உறவு
  2. ஒப்பிடுதல்
  3. ஒற்றுமை
  4. திருமணம்.
10. வாய்மை
  1. உதட்டுச்சாயம்
  2. வரவேற்பு
  3. பேச்சுத்திறமை
  4. உண்மை
11. கேணி
  1. கேள்வி
  2. காது
  3. அகழி
  4. முட்டாள் பெண்
12. கூகை
  1. துதிக்கை
  2. படுக்கை
  3. சுண்டெலி
  4. கோட்டான்
13. பிணி
  1. வேலை
  2. சோம்பல்
  3. நோய்
  4. மருந்து
14. பண்
  1. காயம்
  2. இசை
  3. ஒரு வகையான ரொட்டி
  4. எலிப்பொறி
15. தாளாண்மை
  1. விடாமுயற்சி
  2. போர்க்குணம்
  3. மேலாண்மை
  4. காலாட்படை
16. தகைமை
  1. நகச்சாயம்
  2. மதிப்பு
  3. நட்பு
  4. மென்மை
17. இடும்பை
  1. கசப்பு
  2. பசப்பு
  3. நோய்
  4. பசலை.
18. வேட்கை
  1. கொடுக்கும் கை அல்லது வலது கை
  2. தேர்தல்
  3. விருப்பம்
  4. திருமணம்
19. வீறு
  1. சிறப்பு
  2. அலறு
  3. எறி
  4. கொடி
20. அங்கணம்
  1. கோவணம்
  2. அடிமைத்தனம்
  3. அரக்கர் படை
  4. சாக்கடை

3 கருத்துகள்:

ஹரி கிருஷ்ணன் சொன்னது…

என்ன மணி இப்படி ஏமாற்றிவிட்டீர்களே! ஒவ்வொரு சொல்லுக்குமுள்ள விழைவுக்கு எதிரிலும் ஒரு தெரிவுப் புள்ளி (ரேடியோ பட்டனா அல்லது வேறு பெயரா, மறந்துவிட்டது--சுட்டியால் தொட்டால் தேர்வாகுமே அது) கொடுத்து, விடைகளின் எண்ணிக்கையை நிரலியே கணித்து, பங்கேற்பவருக்கான பட்டத்தைக் கணினியே கொடுக்க வேண்டாமா! அருமையான வாய்ப்பை இழக்க நேர்ந்ததே! --ஹரி கிருஷ்ணன்

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

ஹரி, செய்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு விடையையும் பார்த்து, அதன் தொடுப்பைச் சொடுக்கி, மேலும் அந்தச் சொல்லைப் பற்றிக் கற்றுக் கொள்ள எப்படி வகை செய்வது என்று சிந்தித்துப் பார்த்து இட வேண்டும். அது வரை, டைஜஸ்ட்டின் வழியைத்தான் பின் பற்ற வேண்டியிருக்கிறது. தொடங்குவது என்று முடிவு செய்த பிறகு, உடனடியாகச் செய்து விட்டேன். அதனால், பயனர் எளிமையில் குறைபாடுகள் உள்ளன. பொறுத்தருள்க!

Unknown சொன்னது…

மிகுந்த பாராட்டுக்குரிய முயற்சி.

கருத்துரையிடுக